காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-05 19:21 GMT

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதுகுறித்து அவர் கூறும் போது, மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தொழில்கள் முடக்கம் அடைந்து உள்ளன. வேலை வாய்ப்பு குறைந்து உள்ளது. மேலும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தி உள்ளோம் என்று கூறினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணி, மாநகர பொதுச்செயலாளர் தாரை ராஜகணபதி, துணைத்தலைவர் பழனி, முன்னாள் மாவட்ட தலைவர் மேகநாதன், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் வரதராஜ், விவசாயி அணி மாவட்ட தலைவர் சிவக்குமார், பொதுச்செயலாளர் கோபிகுமரன், மண்டல தலைவர்கள் கோவிந்தன், ராமன், நாகராஜ், நிஷார் அகமது, சாந்தமூர்த்தி உள்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்