நெகமம்
நெகமம் அருகே உள்ள ஆலாம்பாளையம் இட்டேரி பகுதியில் சேவல் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெகமம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் வைத்து சூதாடிக்கொண்டு இருந்த பெரியா கவுண்டனூரை சேர்ந்த முத்துசாமி(வயது 50), டி.கோட்டம்பட்டியை சேர்ந்த காளிமுத்து(25), மீனாட்சிபுரத்தை சேர்ந்த தமிழரசு(21), கோபால்சாமி(28), ரமேஷ் குமார்(34), தினேஷ்குமார்(25), பொள்ளாச்சி சேர்மன் வீதியை சேர்ந்த கதிர்வேல்(25) ஆகிய 7 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் மற்றும் ரூ.1,500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.