ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் ஜாமீன் மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.;

Update:2023-10-13 02:00 IST


பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "வேலைக்கு சென்ற தனது கணவர் வீடு திரும்பவில்லை என்று சுகந்தா என்பவர், கடந்த செப்டம்பர் மாதம் விருதுநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் போலீசார் உள்நோக்கத்துடன் செயல்பட்டு, என்னை கைது செய்தனர். கடந்த 5 வருடங்களாக என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மேற்கண்ட புகாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்கப்பட்டு, வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும். அதனால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்