ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்?

ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Update: 2022-10-15 21:48 GMT

செம்பட்டு:

கடத்தலை தடுக்க நடவடிக்கை

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் உள்நாட்டு விமான சேவைகளும் உள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கத்தை கடத்தி வருவதை தடுக்கும் நிலையில், திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களாக நடத்திய சோதனையில் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.1 கோடி தங்கம்...

இந்த நிலையில் நேற்று காலை 10.50 மணியளவில் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்வதற்கான நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதையடுத்து சுமார் 25 பயணிகளை நேற்று காலை முதல் சோதனை செய்தனர். இதில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 4 பயணிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே எவ்வளவு தங்கம் கடத்தி வரப்பட்டது என்பது குறித்த முழுமையான தகவல் தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்