ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் ரூ.30 ஆயிரம் 'அபேஸ்'

திங்கள்நகரில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் ரூ.30 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-05-21 17:10 GMT

திங்கள்சந்தை:

திங்கள்நகரில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் ரூ.30 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

அரசு பள்ளி ஆசிரியை

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரேணுஅமிர்தா (வயது54). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் தனது தாயாருக்கு மருந்துகள் வாங்க நாகர்கோவிலுக்கு சென்றார். பின்னர் பார்வதிபுரத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக மிடாலம் பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்தநிலையில் பஸ் திங்கள்நகர் பஸ் நிலையத்தை வந்ததும் ரேணுஅமிர்தா, தனது தோள் பை திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தோள்பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.30 ஆயிரத்து 650 ரொக்கப் பணத்தை காணவில்லை.

பயணிகளிடம் சோதனை

இதுகுறித்து ரேணு அமிர்தா பஸ் டிரைவர் ஸ்டான்லி, கண்டக்டர் சுதன் ஆகியோரிடம் தெரிவித்தார். உடனே, டிரைவரும், கண்டக்டரும் பயனிகளை இறங்க விடாமல் தடுத்து நிறுத்திவிட்டு இரணியல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பயணிகளிடம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

இதற்கிடையே ஒரு பெண் பயணி கருங்கல் செல்ல வேண்டும் என பஸ்சில் ஏறியதாகவும், அவர் கண்டன்விளையில் இறங்கிவிட்டதாகவும் சில பயணிகள் கூறினர். இதனால் கண்டன்விளையில் இறங்கிய பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்