அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2023-05-21 23:56 GMT


மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 35). இவரது மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த ஆனந்த் (56) கூறினாராம். அதன்படி சுரேஷ்குமார் ரூ.6 லட்சத்து 95 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தார். ஆனால், பணம் வாங்கிய ஆனந்த், கூறியபடி வேலை வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்