சேலம்: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறைநாளையொட்டி ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-07-03 15:01 GMT

ஏற்காடு,

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் சனி,ஞாயிறு விடுமுறை நாட்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால் ஏற்காட்டில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் ராஜா தோட்டம், சேர்வராயன் கோயில், கரடியூர், கிளியர் நீர்வீழ்ச்சி, படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு சென்று மகிழ்ந்தனர். இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்யும் சூழல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்