லாரியில் மணல் கடத்தியவர் கைது

வீரவநல்லூரில் லாரியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-06-27 02:41 IST

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் தலைமையில் போலீசார், வீரவநல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். இதில், உரிய அனுமதிச்சீட்டு இன்றி லாரியில் எம்.சாண்ட் மணலை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவரான வீரவநல்லூர் கம்பளத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து, எம்.சாண்ட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்