தேரடி விநாயகர் கோவிலில் சந்தன காப்பு திருவிழா
திருக்கோவிலூரில் தேரடி விநாயகர் கோவிலில் சந்தன காப்பு திருவிழா நடைபெற்றது.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தின் முன்புறம் தேரடி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சந்தன காப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் தேரடிவிநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.