மரக்கன்றுகள் நடும் விழா

உலக ஓசோன் தினத்தையொட்டி மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது;

Update:2022-09-22 00:15 IST

உலக ஓசோன் தினத்தையொட்டி நேற்று மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் மாணவர்களிடையே ஓசோன் தினம் பற்றி பேசினார். பள்ளி ஆசிரியர் வரதராஜன் வரவேற்று பேசினார் விழாவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா, பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியை வனிதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்