சாத்தான்குளம் வழக்கு: உடல்களில் இருந்த காயங்களே இருவரின் உயிரிழப்புக்கு காரணம் - எய்ம்ஸ் மருத்துவர் சாட்சியம்

சாத்தான்குளம் கொலை வழக்கு குறித்து எய்ம்ஸ் மருத்துவர் அரவிந்த் குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.;

Update:2023-08-05 21:46 IST

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியதில் தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து எய்ம்ஸ் மருத்துவர் அரவிந்த் குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அதில் அரசு மருத்துவர்கள் அளித்த உடற்கூராய்வு அறிக்கையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரது உடல்களில் இருந்த காயங்களே அவர்களது உயிரிழப்புக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை தங்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்