ஆரம்பப்பள்ளி ஆண்டு விழா

கடையநல்லூரில் சக்ஸஸ் மழலையர்-ஆரம்பப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.;

Update:2023-03-24 00:15 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் சக்ஸஸ் மழலையர் மற்றும் ஆரம்பப்பள்ளியின் ஆண்டு விழா கடையநல்லூரில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் பர்வீன் பேகம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் தீயணைப்பு துறை அலுவலர் ஜெயராம் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளை வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களையும், பரிசுகளையும் வழங்கினார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்