பள்ளி ஆண்டு விழா

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.;

Update:2023-03-28 00:15 IST

கடையம்:

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா ஆனந்த் ராமகிருஷ்ணன் கலையரங்கத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சுந்தரம் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ரோகினி பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி செயலர் தேவராஜன் வாழ்த்துரை வழங்கினார். அம்பை விகாஸா பள்ளியின் முதல்வர் சிந்து, மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார். மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் ஷாகிதாஷா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்