பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் - நயினார் நாகேந்திரன் வாழ்த்து
மக்கள் சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாஜகவில் என்றுமே சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு என நயினார் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பிஹார் மாநிலத்தில் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், அரசு அமைச்சராகவும் மக்கள் பணியாற்றி, அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றுள்ள நிதின் நபின், பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது நிறைவான மகிழ்ச்சியளிக்கிறது.
மக்கள் சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாஜகவில் என்றுமே சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு என்பதை மீண்டுமொருமுறை உணர்த்தும் இந்த முன்னெடுப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன்.
மேலும், பாரதத்தின் வளர்ச்சிக்காகவும், வலிமைக்காகவும் அர்ப்பணிப்புடன் அயராது உழைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிதின் நபினது பணி சிறக்க எனது மனப்பூர்வமான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.