திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பால் உருவான 6 அடி பள்ளம்- புனிதநீராட பக்தர்கள் சிரமம்

அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் உள் வாங்குவதும், சீற்றதுடன் காணப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.;

Update:2025-12-14 20:16 IST

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ளது. இக்கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுவதால் நாள்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்த நிலையில் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள் வாங்குவதும், சீற்றதுடன் காணப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று கோவில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால் சுமார் 6 அடி மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கடலில் புனித நீராட சிரமப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக கோவில் கடல் சீற்றத்துடன் உள்வாங்கியும், வெளியே வருவதுமாக உள்ளதால் புனித நீராடும் பக்தர்களுக்கு கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டு காயங்கள் ஏற்படுகிறது. இதனால் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு செய்து பல மாதங்கள் ஆகியும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லாததால், விரைந்து நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்