கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. கடிதம்
கே.என்.நேரு மீதான முறைகேடுகளின் மதிப்பு சுமார் ரூ.1,020 கோடி வரை இருக்கலாம் என அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை சுட்டிக்காட்டியுள்ளார்.;
சென்னை,
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் டெண்டர் முறைகேடு, ஒப்பந்தம் வழங்குவதற்கு லஞ்சம் என கே.என்.நேரு மீதான முறைகேடுகளின் மதிப்பு சுமார் ரூ.1,020 கோடி வரை இருக்கலாம் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணம் ஹவாலா பணமாக மாற்றப்பட்டு விட்டதாக அமலாக்கத்துறை ஆவணங்கள் தெளிவுபடுத்துவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அமலாக்கத்துறை சார்பில் தமிழக தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.