இட்டமொழி:
பாளையங்கோட்டை யூனியன் புதுக்குளம் ஊராட்சி வீரளப்பெருஞ்செல்வி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 66-வது ஆண்டு விழா நடைபெற்றது. புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சி.முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் சு.கல்யாணி, தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா புஷ்பரஞ்சனி, ஆசிரியர் நெல்லையப்பன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.