சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் வடக்குபுதூர் வேல்ஸ் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் சண்முகசாமி தலைமை தாங்கினார். முதல்வர் ஜெயபாரதி, வேல்ஸ் ஐ.டி.ஐ. முதல்வர் மேகலா முன்னிலை வகித்தனர். வடக்குபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி கலந்துகொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.