பள்ளி மாணவி கர்ப்பம்

பள்ளி மாணவி கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-10 17:15 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 23). இவர் 16 வயதுடைய பள்ளி மாணவியிடம் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் சின்னதுரை செல்போன் மூலம் மாணவியை தொடர்பு கொண்டு அவரை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி சென்ற அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை சின்னதுரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் மாணவி கர்ப்பமானார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், சின்னதுரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்