அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி;

Update:2023-03-03 00:15 IST

ஊட்டி

குன்னூர் அருகே சோகத்தொரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இங்கு படிக்கும் 43 மாணவர்கள் 50-க்கும் மேற்பட்ட எளிய அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்தனர். வானவில் மன்ற கருத்தாளர் கண்காட்சியில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சுமதி மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். அறிவியல் கண்காட்சியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் அறிவியலில் புதுமைகளை எவ்வாறு புகுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்