விவசாயிக்கு அரிவாள் வெட்டு
நல்லம்பள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.;
நல்லம்பள்ளி
தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் அருகே காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜாமணி (வயது45). விவசாயி. இவரது செல்வி (39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் காமராஜ் நகர் அருகே உள்ள அப்பனஅள்ளிகோம்பை கிராமத்தைச் சேர்ந்த ராமன் (25) என்பவருக்கும், செல்விக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை செல்வியும், ராமனும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். இதை ராஜாமணி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த செல்வி, கள்ளக்காதலன் ராமன் ஆகியோர் அரிவாளால் ராஜாமணியை வெட்டினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வி, ராமன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.