மாடு அறுவை மனைக்கு 'சீல்'

குத்தகை பாக்கியை செலுத்தாததால் மாடு அறுவை மனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;

Update:2022-07-20 22:34 IST

கோவை

கோவை மாநகராட்சிக்கு சொந்தமாக சத்தி ரோடு, செட்டிப்பாளையம் பகுதியில் மாடு அறுவை மனை உள்ளது. இங்கு மாடுகளை அறுத்து சீல் வைக்கப்பட்டு இறைச்சிக்காக அனுப்பப்படுவது வழக்கம். இதனை அஸ்கர் அலி என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் மாடு அறுவை மனைக்கான குத்தகை பாக்கி ரூ.60 லட்சம் இன்னும் செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கோவை மத்திய மண்டல மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்தஅறுவை மனைக்கான குத்தகை பாக்கியை செலுத்துமாறு உதவி கமிஷனர் சங்கர் அறிவுறுத்தி வந்தார். ஆனாலும் குத்தகை பாக்கியை செலுத்தாததால் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் மாடு அறுவை மனையை மூடி 'சீல்' வைத்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் சங்கர் கூறும்போது, சத்தி ரோட்டில் உள்ள மாடு அறுவை மனைக்கு சீல் வைக்கப்பட்டதால், இங்கு அறுவைக்கு வரும் மாடுகள் தற்காலிகமாக செட்டிப்பாளையம் ரோடு மாடு அறுவை மனைக்கு அனுப்பி வைக்கப்படும். குத்தகை பாக்கியை செலுத்திவிட்டால் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்