சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய 15 பேருக்கு அபராதம் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வந்த 15 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சீட் பெல்ட் அணியவதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்த அதிகாரிகள் சீட் பெல்ட் அணியாத டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.