செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ரங்கப்பனூரில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-06-01 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே ரங்கப்பனூரில் பொது மக்கள் சார்பில் புதிதாக செல்வ விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோ பூஜை, விக்னேஷ்வரபூஜை, பஞ்சகவ்ய பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் நவகிரக ஹோமம், இரண்டாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று 9 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்