கூடங்குளம் அருகே 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் விவசாயி கைது

கூடங்குளம் அருகே, 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்;

Update:2022-05-22 02:47 IST

வள்ளியூர்:

கூடங்குளம் அருகே, 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் புதுமனையைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 53). விவசாயி.

இவர், 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கைது

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அந்த மாணவியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்