பொதுமக்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ. குறை கேட்பு

ஓட்டப்பிடாரம் அருகே பொதுமக்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.;

Update:2022-06-11 22:39 IST

ஓட்டப்பிடாரம்:

ஒட்டப்பிடாரம் அருகே அ.குமராபுரம் கிராமத்தில் சண்முகையா எம்.எல்.ஏ. பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது சாலை வசதி, குடிநீர் வசதி, கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த தனியார் மினி பஸ், தூத்துக்குடியில் இருந்து குமராபுரம் வழியாக குளத்தூர் வரை இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது இயக்கபடவில்லை. எனவே அதனை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க அங்குள்ள சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்த சண்முகையா எம்.எல்.ஏ சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்