தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு

Update: 2023-06-14 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,034 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2 ஆயிரத்து 674 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.551-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.9 விலை அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.560-க்கும், குறைந்தபட்சமாக ரூ.263-க்கும், சராசரியாக ரூ.432.61-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 56 ஆயிரத்து 940 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்