சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

நவ்வலடி டி.எம்.என்.எஸ். சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.;

Update:2022-12-04 02:20 IST

திசையன்விளை:

நவ்வலடி டி.எம்.என்.எஸ். சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி 28-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டுவிழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணக்குமார், யூனியன் கவுன்சிலர் அனிதா ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் ரவிந்திரன் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் ராஜராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் கலந்து கொண்டார். விழாவில் தட்சணமாற நாடார் சங்க பொருளாளர் செல்வராஜ், செயலாளர் ராஜகுமார், டி.எம்.என்.எஸ். கல்லூரி செயலாளர் ராமநாதன், பள்ளி நலக்குழு உறுப்பினர்கள் சாரா சவுந்தர், கோபால், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் சிவசாந்தகுமாரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்