சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.;
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் முகிலன் பள்ளியில் முதலிடத்தையும், மாணவி நிஷாசினி இரண்டாம் இடத்தையும், ஸ்ரீதர்ஷினி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு பள்ளி செயலர் காமராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் மரிய ஹெலன் சாந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர். மேலும் நாளை (திங்கட்கிழமை) முதல் 11-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.