விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் எட்டூர் வட்டம் சோதனை சாவடி அருகே சாலை ஓரத்தில் மண்டை ஓடு கிடந்தது. இதை கண்டவர்கள் வச்சகாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் யாரேனும் கொலை செய்யப்பட்டு உடல் வீசப்பட்டதா என்பது பற்றியும், அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் மாயமானவர்கள் விவரத்தை பற்றியும் போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.