சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360-க்கு விற்பனையானது.

Update: 2024-04-05 04:53 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்தது. நேற்று தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்