தந்தையை தாக்கிய மகன் கைது

கயத்தாறு அருகே தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-06-19 00:15 IST

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள சூரியமினிக்கன் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கொம்பையா. இவருடைய மகன் முருகன். இவர் வீட்டில் குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதற்கிடையே முருகனின் மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் முருகன் நேற்று முன்தினம் மது குடிப்பதற்கு கொம்பையாவிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த முருகன், அங்கு கிடந்த உருட்டு கட்டையால் தந்தை என்றும் பாராமல் கொம்பையாவை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கொம்பையா 108 ஆம்புலன்சில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்