தேர்ச்சி பெறாத தொலைதூர கல்வி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு

தேர்ச்சி பெறாத தொலைதூர கல்வி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்கிறது.;

Update:2023-03-18 03:10 IST

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்க உள்ளது. இது குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக திருச்சி பொறுப்பு அலுவலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2002 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் தொலைதூர கல்வி வழியில் பயின்று, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வருகிற மே மாதம் 2023 மற்றும் டிசம்பர் 2023 இரு பருவங்களில் சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது. இதல் மே மாதம் நடக்கவுள்ள சிறப்பு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் www.coe.annamalaiuniversity.ac.in/bank/splddeapp.php என்ற பல்கலைக்கழக இணையத்தில் வருகிற மார்ச் 31-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தேர்ச்சி பெறாத மாணவர்கள் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்