சிறப்பு மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் ஆணையர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பராஜ், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, நகர் நல அலுவலர் ராஜநந்தினி, வட்டார மருத்துவ அலுவலர் கணேஷ், அரசு ஆரம்ப சுகாரநிலைய மருத்துவர் கோமதி, சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.