வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

தியாகதுருகம் வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update:2023-01-11 00:15 IST

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகத்தில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்