ஆங்கில புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஆங்கில புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.;

Update:2023-01-02 00:15 IST

ஆங்கில புத்தாண்டையொட்டி அரியலூர் நகரில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12 மணியளவில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். நகரின் சாலைகளில் வந்த இளைஞர்கள் செல்போனில் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

இதேபோல் நகரில் உள்ள ஆரோக்கியமாதா, சந்தன மாதா, சி.எஸ்.ஐ. மாதா தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்