காத்தாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

குடவாசல் அருகே காத்தாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்றனர்;

Update:2022-05-19 23:29 IST

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள சித்தாடி காத்தாயி அம்மன் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சக்தி தலம் ஆகும். இந்த கோவிலில் வைகாசி வியாழக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று வைகாசி வியாழன் என்பதால் காத்தாயி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் வினோத் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்