போஜீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

போஜீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.;

Update:2022-07-22 02:30 IST

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள போஜீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கால பைரவருக்கு பால், நெய், இளநீர், கரும்பு உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வடை மாலை சாத்தப்பட்டு, தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசாமி கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்