வலம்புரி செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை

Update:2023-09-04 00:15 IST

மேச்சேரி

ஜலகண்டாபுரம் பஸ் நிலையம் அருகில் வலம்புரி செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி வலம்புரி செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம், பூஜை நடந்தது. வெள்ளி கலசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்