மேல மறைக்காடர் கோவிலில் ருத்ரயாகம்

மேல மறைக்காடர் கோவிலில் ருத்ரயாகம் நடந்தது.;

Update:2023-05-22 00:45 IST

வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் உள்ள மேல மறைக்காடர் கோவிலில் உலக நன்மைக்காக ருத்ர யாகம் நடந்தது. இதை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜையுடன், சுப்பிரமண்ய, நவக்கிரக பரிகார விசேஷ பூஜைகளும் நடந்தன. அதைத்தொடர்ந்து வேதநாயகி அம்மனுக்கு ருத்ர மகாயாகம் நடந்தது. பின்னர் மேல மறைக்காடர், வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. யாக பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்