மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி

மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடந்தது.;

Update:2023-04-29 01:35 IST

புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் போட்டியின் நடுவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், 'பேச்சுக் கலை என்பது எண்ணங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மற்றவர்கள் முன்பாக நல்ல வாதமாக எடுத்து வைப்பதற்கு சமமாகும். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆற்றல் கொண்டிருப்பார்கள். எழுத்தாற்றல், பேச்சாற்றல், இசை, நடனம், ஓவியம் போன்ற பல்வேறு ஆற்றல்களில் ஏதேனும் ஒரு ஆற்றலில் சிறந்தவர்களாக மாணவர்கள் இருப்பார்கள். தங்களிடம் உள்ள ஆற்றலை வளர்த்து கொண்டு எதிர்காலத்தில் சிறந்தவர்களாக, வல்லவர்களாக இந்த நாட்டிற்கு பயன்பட வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்