அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.

Update: 2023-02-16 18:45 GMT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தேனி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.

இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார். கபடி, இறகுப்பந்து, கைப்பந்து, செஸ் மற்றும் தடகள போட்டிகள் நடந்தன. தடகளத்தில் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடந்தன. இதில் அரசு ஊழியர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்