இலங்கை வடக்கு மாகாண கவர்னர் சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில், இலங்கை வடக்கு மாகாண கவர்னர் சாமி தரிசனம் செய்தார்.;

Update:2022-11-28 22:22 IST

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவ்வப்போது பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் இலங்கை நாட்டின் வடக்கு மாகாண கவர்னர் ஜீவன் தியாகராஜா, நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு பிறகு முருகப்பெருமானை தரிசித்தார். இதனையடுத்து கோவில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

முன்னதாக ரோப்கார் நிலையத்தில் அவரிடம், இலங்கையின் பொருளாதார நிலை, ஆட்சி நிர்வாகம் மற்றும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர், தற்போது சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்தேன் என்றும், இதற்கு பதில் கூற இயலாது என்றும் கூறி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்