எஸ்.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது

Update: 2022-12-12 18:45 GMT

கடலூர்

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

4,500 பணியிடங்கள்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்.எஸ்.சி.) தற்போது 4,500-க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான பணி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி காலியிடங்களுக்கான கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இந்த தேர்வு எழுத விரும்புவோர் https://ssc.nic.in/என்ற இணையதள முகவரி மூலமாக வருகிற 4.1.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு

இதற்கிடையே கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக நாளை (புதன்கிழமை) முதல் பிற்பகல் 2.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை இப்போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் பயிற்சி வகுப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை 94990 55908 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்