மாநில அளவிலான எறிபந்து போட்டி: அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்குதேர்வான அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு;

Update:2023-09-18 23:56 IST

பள்ளிக் கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தில் வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் பங்கேற்று விளையாடி முதல் இடம் பிடித்தனர்.இதனால் அவர்கள் மாநில அளவில் நடக்கும் எறிபந்து போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவிகள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கலைராஜ் ஆகியோரை, தலைமை ஆசிரியர் சண்முகவடிவு, ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள், சக மாணவிகள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்