திட்டுவிளையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்
திட்டுவிளையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.;
அழகியபாண்டியபுரம்,
திட்டுவிளையில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
முகம்மது நபி குறித்து அவதூறாக பேசிய கருத்துகளை கண்டித்தும், நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று திட்டுவிளை பஸ்நிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு திட்டுவிளை எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் சேக்மைதீன் தலைமை தாங்கினார். பூதப்பாண்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் அசாருதீன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் மணவை சாதிக் அலி, புதிய விடியல் எழுத்தாளர் செய்யதலி மற்றும் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி உஸ்மானி ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் நகர துணைத்தலைவர் சேக் அப்துல் காதர் நன்றி கூறினார்.