மாநில அளவிலான கலை போட்டியில் பங்கேற்க மயிலாடுதுறையில் இருந்து மாணவர்கள் 406 பேர் 7 பஸ்களில் புறப்பட்டனர்
மாநில அளவிலான கலை போட்டியில் பங்கேற்க மயிலாடுதுறையில் இருந்து 406 பேர் 7 பஸ்களில் புறப்பட்டனர்.;
மாநில அளவிலான கலை போட்டியில் பங்கேற்க மயிலாடுதுறையில் இருந்து 406 பேர் 7 பஸ்களில் புறப்பட்டனர்.
கலை போட்டிகள்
தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் அழியாமல் தடுக்கும் வகையிலும் மாணவ, மாணவிகள் பள்ளி படிப்புடன் சேர்ந்து மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையிலும் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், நாதஸ்வரம், தோல் இசைக்கருவிகள், வாய்ப்பாட்டு, ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட 34 வகையான கலை போட்டிகள் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டன. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 406 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
3 பிரிவுகள்
இவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9, 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11, 12-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் முதல் பிரிவுக்கு மதுரையிலும், 2-வது பிரிவுக்கு கோவையிலும், 3-வது பிரிவுக்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை 4 நாட்கள் நடக்கிறது.
இதற்காக மயிலாடுதுறை மாவட்ட மாணவர்கள் 406 பேர் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து 7 பஸ்கள் மூலம் மாநில போட்டிகள் நடைபெறும் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
வழி அனுப்பி வைத்தனர்
இவர்களுடன் 7 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 42 ஆசிரியர்கள் உடன் சென்றுள்ளனர். இவர்களை முதன்மை கல்வி நேர்முக உதவியாளர் பரமசிவம், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஞானசேகர், மாவட்ட கல்வி அலுவலர் தியாகராஜன், கொள்ளிடம் ஒன்றிய மேற்பார்வையாளர் ஞானப்புகழேந்தி ஆகியோர் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.