நாமகிரிப்பேட்டை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லமுடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் நாமகிரிப்பேட்டை பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்றும் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் மழை பெய்ததால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறு சென்றதை காணமுடிந்தது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.