திடீர் வாந்தி... ! மரணம் - போதை ஊசியால் கோவை கல்லூரி மாணவருக்கு நடந்த சம்பவம்...!
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே போதை தரும் வலி மாத்திரைகளை உட்கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.;
கோவை
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் கல்லூரியில் அஜய்குமார் என்ற மாணவர் பி இ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
நண்பர் அறையில் தங்கி இருந்த அஜய் குமாருக்கு கடந்த 13ந்தேதி உடல் நலம் பாதிக்கப்படவே சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை ஊசி மூலம் ஏற்றப்பட்டதால் இறப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது பஷீர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இறந்த மாணவர் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தண்ணீரில் கரைத்து சிரிஞ்சு மூலமாக போதைக்காக தனக்குத்தானே செலுத்திக் கொண்டது தெரிய தெரியவந்தது.
மாணவனின் நண்பர்களை விசாரணை செய்ததில், மேற்கண்ட வலி நிவாரண மருந்தை கும்பகோணத்தில் தனியார் மருந்து கடை வைத்திருக்கும் முகமது பஷீர் என்பவர் மருத்துவர் பரிந்துரை இல்லாமல், லாப நோக்கத்தோடு விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக வழக்கின் சட்டப்பிரிவை மாற்றம் செய்த போலீசார் முகமது பஷீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.