சத்தியமங்கலத்தில் லாரியில் இருந்து கரும்புகள் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலத்தில் லாரியில் இருந்து கரும்புகள் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு;

Update:2023-08-02 03:27 IST

சத்தியமங்கலம்

கோபியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு லாரியில் கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. சத்தியமங்கலத்தில் உள்ள ஆசனூர் ரோட்டில் லாரி சென்றபோது, லாரியில் இருந்து கரும்பு கட்டுகள் சரிந்து ரோட்டில் விழுந்தன. இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து அதிகம் இல்லை. அதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. அதன்பின்னர் அந்த பகுதி மக்களின் உதவியுடன் கரும்புகள் ரோட்டில் இருந்து அகற்றப்பட்டன. எனினும் சுமார் 30 நிமிடம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்